தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி..! ஆயுத கிடங்கை தேடி அகழ்வு..! ஒன்றும் சிக்கவில்லையாம்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி..! ஆயுத கிடங்கை தேடி அகழ்வு..! ஒன்றும் சிக்கவில்லையாம்.

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தவர்களின் ஆயுத கிடங்கு உள்ளதாக கூறி யாழ்.அரியாலை பகுதியில் அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் முதல் கட்ட அகழ்வில் எந்தவொரு பொருட்களும் மீட்கப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர். 

அவர் மூவரும் அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் தங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். 

தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதன்படி யாழ் பொலிஸாரால் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த வீட்டில் அகழ்வு நடாத்த அனுமதி பெறப்பட்டது. 

அனுமதி பெறப்பட்ட சில மணித்தியாலங்களில் இராணுவம், பொலிஸ் இணைந்து குறித்த வீட்டில் அகழ்வு நடவடிக்கைகளை ஆர்ம்பித்துள்ளனர். வீட்டின் அறைகளின் நிலங்கள் தோண்டப்பட்டு குறித்த அகழ்வு நடை பெற்று வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு