SuperTopAds

இராணுவ ஆட்சி உருவாக்கப்படுகிறதா..? ஒருபோதும் நடக்காது என்கிறாா் பாதுகாப்பு செயலா்..

ஆசிரியர் - Editor I
இராணுவ ஆட்சி உருவாக்கப்படுகிறதா..? ஒருபோதும் நடக்காது என்கிறாா் பாதுகாப்பு செயலா்..

இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப் படாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் மேஜா் ஜெனரல் கமால் குணரத்ன கூறியிருக்கின்றாா். 

மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் இன, மத பேதமின்றி கௌரவத்துடன் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்காகவே முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான 

விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் 

இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டது.இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் சாதாரணமாக சட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும்போது பொலிஸாருக்கு அவை தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து நாட்டு மக்களுக்கு 

ஒழுக்கமானதும் அமைதியானதுமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இவ்வாறிருக்க ஏதேனுமொரு பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போது 

பொலிஸாரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, பொலிஸில் விசேட பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.