ஜ.தே.கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் அரச நியமனங்கள், மற்றும் கடன் திட்டங்கள் இரத்து..! அரசியல் பழிவாங்கல்..

ஆசிரியர் - Editor I
ஜ.தே.கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் அரச நியமனங்கள், மற்றும் கடன் திட்டங்கள் இரத்து..! அரசியல் பழிவாங்கல்..

ஐக்கியதேசிய முன்னணி ஆட்சியில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் பேருக்கான அரச நியம னங்கள், மற்றும் கடன் திட்டங்களை இரத்து செய்யபோவதாக புதிய அரசாங்கம் உத் தரவு பிறப்பித்திருக்கின்றது. 

இதுதொடர்பாக திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, வங்கிகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார்.இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களில் 

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சலுகைக் கடன்களும் அடங்கியுள்ளன. முன்னைய அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் 7000 பேருக்கு வழங்கப்பட்ட அரச நியமனங்களையும் இடைநிறுத்தி வைக்க 

உத்தரவிடப்பட்டுள்ளது. முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைச்சாலைகளில் வழங்கப்பட்ட 1300 பேருக்கான வேலை வாய்ப்புகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு