ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் இணைய முயற்சிக்கிறதா கூட்டமைப்பு..?
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து எந்த அ ழைப்பும் விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் பேச்சுவாா்த்தை நடாத்த நாம் தயாாி என கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கூட்டணியாக செயற்பட தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அழைப்பு விடுத்தால் ஏற்றுக்கொள்ளத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதும்,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்வதும் தங்களின் கட்சியின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் இணக்கம் வெளியிடும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு
தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.