புதையல் வேட்டையில் ஈடுபட்டவா்களை வேட்டையாடிய பொலிஸ்..! வவுனியா வடக்கு- நைனாமடுவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புதையல் வேட்டையில் ஈடுபட்டவா்களை வேட்டையாடிய பொலிஸ்..! வவுனியா வடக்கு- நைனாமடுவில் சம்பவம்..

வவுனியா வடக்கு- நைனாமடு பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 6 போ் பொலிஸாாினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பு தையல் தோண்டுவதற்கான பொருட்கள், பூசை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்று (23.11) இரவு 11.30 மணியளவில் புளியங்குளம் நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 6பேரடங்கிய குழுவினர் புதையல்தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு 

வருவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் சென்ற பொலிஸ் குழுவினர் புதையல்தோண்டிய 6பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர்.

அவர்களிடமிருந்து மண்வெட்டி. பூஜைப் பொருட்கள் , மோட்டார் சைக்கிள் , முச்சக்கரவண்டி என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது மரக்காரம்பளை, ஓமந்தை, 

நெடுங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 39, 40, 42, 44, 46,56 வயதுடையவர்கள் என்றும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த 

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபுல் விதானகே தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச, 

சாஜன்களான ரத்னாயக்க(36383), ஜெயவீர (36944), பொலிஸ் கொஸ்தாபல்களான இரறத் (60949), நந்தகுமார் (88870), சம்பத் (84984), செனரத்ன (80903) ஆகிய குழுவினரால் இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு