யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் பிரதேசத்தில் மாவீரர் வாரம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஆசிரியர் - Admin
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் பிரதேசத்தில் மாவீரர் வாரம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

தமிழரின் தனி தேசத்துக்கான போராட்டத்தில் மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ளது, வழமைபோன்று தாயகத்தில்  யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில்   துப்பரவு செய்யப்பட்டு மலரஞ்சலி, வீரவணக்கம்  செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையில், அதற்கு முன்பாகவுள்ள தனியார் காணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துப்பரவு செய்யப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio