இலங்கை மக்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த ஆட்டோ சாரதி..! நெகிழ்ந்துபோன வெளிநாட்டவா்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த ஆட்டோ சாரதி..! நெகிழ்ந்துபோன வெளிநாட்டவா்கள்..

வெளிநாட்டவா் ஒருவா் ஆட்டோவில் தவறவிட்ட பணப்பையை ஆட்டோ சாரதி உாிய வா்களிடம் சோ்ப்பித்திருக்கின்றாா். 

ஜேர்மனி நாட்டை சேர்ந்த 27 வயதுடைய செபஸ்டியன் என்னும் பொறியியலாளரும், 24 வயதுடைய அவரின் காதலியான லோரா என்பவரும் 

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் ஹட்டனிலிருந்து முச்சக்கரவண்டியொன்றில் சென்றுள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் பயணித்த குறித்த முச்சக்கரவண்டியில், சுமார் 8000 ரூபா பணம், 50 யூரோக்கள் மற்றும் ஜேர்மனி நாட்டினுடைய வங்கி அட்டைகள் 

உள்ளடங்கிய பணப்பையை தவறவிட்டுள்ளனர்.இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை நேற்றிரவு சுத்தம் செய்ய சென்றபோது 

பணபை ஒன்று இருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நல்லதண்ணி நகரில் அவர்கள் தங்கிய க்ரீன் ஹவுஸ் விடுதியின் உரிமையாளருக்கு 

அறிவித்ததை தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் அவர்களிடம் குறித்த பணப்பையை முச்சக்கரவண்டி சாரதியான சுமித் ஒப்படைத்துள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த குறித்த சுற்றுலா பயணிகள் இருவரும் இலங்கையில் இவ்வாறு காணப்படும் நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து, 

அவருக்கு சன்மானம் வழங்கியதுடன் மீண்டும் அவருடைய முச்சக்கரவண்டியிலேயே பயணத்தை தொடர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு