ஆட்சிமாற்றம் தொடா்பாக அச்சப்படாதீா்கள்..! மாவீரா்களை நினைவுகூரும் கடமையிலிருந்து தவறவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
ஆட்சிமாற்றம் தொடா்பாக அச்சப்படாதீா்கள்..! மாவீரா்களை நினைவுகூரும் கடமையிலிருந்து தவறவேண்டாம்..

தமிழீழ மாவீரா் நாள் நினைவேந்தலை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூரவேண்டு ம் என கூறியிருக்கும் மாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், நி னைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் கூறியுள்ளாா். 

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னா் மாவீரா் நாள் நினை வேந்தல் தொடா்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்ற து. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும். 

உலகில் எங்கும் இறந்தவா்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க முடியாது என்ப துடன் அது உலகில் பல நாடுகளில் ஒரு வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விடுதலை போாில் உயிாிழந்த எம் உறவுகளை நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க 

முடியாது. தென்னிலங்கையில் ஜே.வி.பி புரட்சிகளில் உயிாிழந்தவா்களுக்கு காா்த்தி கை வீரா்கள் தினம் என்ற ஒரு நாளில் நினைவுகூரல் நடாத்த அனுமதிக்கப்பட்டிருக் கும் இலங்கையில் தமிழா்கள் எங்களுடைய மாவீரா்களை நினைவுகூருவதில் 

என்ன தவறு? எனவே எந்தவொரு தடைவிதிக்கப்படாலும் மாவீரா்களை நினைவுகூரு வதிலிருந்த மக்கள் தவறக்கூடாது. வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரா்க ளுக்கான நினைவேந்தலை நடாத்த பொலிஸாா் சில தடைகளை விதிக்கின்றனா்.

ஆனால் அமைதியாக மாவீரா் நாள் நினைவேந்தல் நடக்கும் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு