SuperTopAds

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் பேச தயாா்..! நோக்கம் சாியாக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் பேச தயாா்..! நோக்கம் சாியாக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை..!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீா்வு தொடா்பாக இதய சுத்தியுடன் பேசுவதற்கு ஜனா திபதி தயாராக இருக்கிறாரா? இருந்தால் பேசுவதற்கு நானும் தயாராக இருக்கின்றே ன் என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில், ஜனா­தி­பதி தேர்தல் முடிவின் பின்னர் அர­சியல் நிலை­மைகள் எவ்­வாறு உள்­ளன என்­பது அனை­வ­ருக்கும் தெரி­கின்­றது. 

ஜனா­தி­பதி கோத்­த­பய ராஜபக் ஷ தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யா­கி­விட்டார். தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இல்­லாது தான் வெற்றி பெற்­ற­தா­கவும் அவரே கூறி­யுள்ளார். 

அவ்­வாறு இருக்­கையில் இந்த நிலை­மைகள் இன­வாத அர­சியல் செயற்­பா­டுகள் ரீதியில் இடம்­பெ­றக்­கூ­டாது என்­பதே தொடர்ச்­சி­யாக எமது கோரிக்­கை­யாக உள்­ளது. அதேபோல் தான் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுடன் இணைந்து பய­ணிக்க விரும்­பு­கின்றேன் 

என ஜனா­தி­பதி கூறி­யுள்ள கார­ணியை நாம் வர­வேற்­கிறோம். அவர் கூறி­யது உண்­ மை­யென்றால் தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற உண்­மை­யான நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இருப்பின் 

நாம் அவ­ருடன் பேச தய­ரா­கவே உள்ளோம். தமிழ் மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்வு ஒன்று வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் நாம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்தோம். சஜித் பிரே­ம­தா­சவும் சிங்­கள பௌத்தர் தான். 

அவர் இன­வா­தி­யா­கவோ பிரி­வி­னை­வா­தி­யா­கவோ செயற்­ப­ட­வில்லை. எனினும் அவர் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு ஒன்­றினை வழங்­குவார் என்ற நம்­பிக்­கையும் வாக்­கு­று­ தி­க­ளுக்கு அமை­யவும் தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்­தனர். 

அவ்­வாறு இருக்­கையில் தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்­ததை சாட்­டாக வைத்து பிரி­வி­னை­வாத அல்­லது இன­வாத சாயம் எம்­மீதோ அல்­லது எமது மக்கள் மீதோ பூச வேண்டாம் என்ற கார­ணியை நாம் கூறு­கின்றோம். 

தமிழ் மக்­களும் தென்­னி­லங்கை சிங்­கள பௌத்தர் ஒரு­வரை தான் ஆத­ரித்­தனர் என்­ பதை மறந்­து­வி­டவும் வேண்டாம். ஆகவே இப்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து ஆராய்­கின்­றது. 

இந்த வார இறு­திக்குள் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் அர­சியல் குழு கூடும். அதேபோல் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களும் சில தினங்­க­ளுக்குள் பேச்­சு­வார்த்தை நடத்தி அடுத்த கட்­ட­மாக என்ன செய்ய வேண்டும் 

என்­பது குறித்து ஆராய்வோம். அதேபோல் உண்­மை­யான நோக்­கங்­க­ளுடன் இத­ய­சுத்­ தி­யுடன் ஜனா­தி­பதி அவர்கள் எம்மை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்தால் நாமும் அவ­ ருடன் பேசி தீர்­வு­களை நோக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுக்க 

தய­ராக உள்ளோம். மேலும் இந்­திய வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் ஜெய­சங்கர் இலங்கை விஜ­யத்தை மேற்­கொண்ட பின்னர் ஜன­தி­ப­தியும் இந்­திய விஜயம் ஒன்­ றினை முன்­னெ­டுக்­க­வுள்ளார். இந்­நி­லையில் தமிழ் மக்­களின் 

விட­யங்­களில் சில அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் பதிவிட விடும்பவில்லை. எமது உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு அப்பால் இராஜதந்திர நகர்வுகளை குழப்பிக்கொள்ள நாம் தாயரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.