ஐக்கியதேசிய கட்சிக்கு புதிய தலைவா் வேண்டும்..! ரணில் கூறுகிறாா். சஜித்திற்கு வழி பிறக்கிறதா..?
ஐக்கியதேசிய கட்சிக்கு புதிய தலமைத்துவம் வரவேண்டும். என அக்கட்சியின் தலை வா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா்.
தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பிளவுநிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணியும்,
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக
இன்னுமொரு அணியும் பிரிந்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்
நேற்று கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்களுக்கு நன்றிகூற மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்த சஜித் பிரேமதாஸவுக்கு சந்தர்ப்பம் கொடுக்கக
கட்சியின் உயர்பீடம் தடுத்ததினால் இந்த பிளவுநிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது. அத்துடன் கட்சியின் தலைமைப் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து
சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படியும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலைமையில் இன்று காலை விசேட ஊடக சந்திப்பை நடத்திய
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம் என்று கூறினார்.