வாக்களித்தாா்களோ இல்லையோ..! தமிழா்களின் அபிலாஷைகளை நிவா்த்தி செய்யுங்கள்..! ஜனாதிபதிக்கு இந்திய தொண்டை பிடி..
இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிவா்த்தி செய்யப்படவேண்டும் என்ப தே இந்தியாவின் மாற்றமில்லாத நிலைப்படாகும். என இந்திய வெளிவிவகார அமை ச்சின் பேச்சாளா் ரவீஷ்குமாா் கூறியிருக்கின்றாா்.
டெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வாக்களித்தவர்களோ இல்லையோ இன மத பேதமின்றி
அனைவரையும் சரிசமமாக பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உரையில் கூறியுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அதேபோல் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு
உறுதியாக இருப்பதாகவும் அந்த முயற்சியில் இந்தியாவை மதிப்புமிக்க பங்காளியாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய நல்லிணக்கத்துடன் இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு
அவர்களுக்கு கண்ணியமான, சமத்துவமான தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிவிவகார அமைச்சர் புதிய ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.