SuperTopAds

அமைச்சு பதவியை வாங்கமாட்டேன் என அறிக்கை விட்டவா் உள்ளடங்கலாக 16 அமைச்சா்கள் பதவியேற்பு..!

ஆசிரியர் - Editor I
அமைச்சு பதவியை வாங்கமாட்டேன் என அறிக்கை விட்டவா் உள்ளடங்கலாக 16 அமைச்சா்கள் பதவியேற்பு..!

நான் கேட்டதை மக்கள் வழங்காமையினால் பதவியேற்கமாட்டேன் என அறிக்கை விட்டிருந் த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 16 அமைச்சா்கள் இன்று காலை அமைச்சு பொறுப்புக்க ளை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளனா். 

ரணில் விக்கிரம சிங்க தலமையிலான அமைச்சு பதவி விலகிய நிலையில் காபந்து அரசாங் கம் ஒன்றை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கோட்டபாய அரசாங்கம். இன்று காலை கா பந்து அரசை அமைத்திருக்கின்றது. 

இதன்படி அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ள 16 அமைச்சா்களின் விபரம்,

1.மஹிந்த ராஜபக்ச - நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சர்.

2.நிமால் சிறிபால -நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர்.

3.ஆறுமுகம் தொண்டமான் - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர்.

4.தினேஸ் குணவர்த்தன - வெளிவிவகாரம், திறன் மேம்பாட்டு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர்.

5.டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்.

6.பவித்திரா வன்னியாராட்சி - சுகாதாரம், சுதேச மருத்துவம், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர்.

7.பந்துல குணவர்த்தன - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.

8.ஜானக பண்டார - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.

9.சமல் ராஜபக்ச - மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்.

10.டலஸ் அழகப்பெரும - கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

11.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.

12.விமல் வீரவங்ச - சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.

13.மஹிந்த அமரவீர - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.

14.எஸ்.எம்.சந்திரசேன - சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.

15.ரமேஸ் பத்திரண - பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.

16.பிரசன்ன ரணதுங்க - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.