அரசியல் பரபரப்புக்கு மத்தியில் காபந்து அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றாா்..!

ஆசிரியர் - Editor I
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் காபந்து அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றாா்..!

இலங்கையின் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சற்று முன்னா் பதவியேற்றிருக்கின்றாா். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்ட பாய ராஜபக்ச முன்னிலையில் நடைபெற்றுள்ளது. 

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், அங்கஜன் ராமநாதன், 

ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பலரும் கலந்துகொண்டிருந்த னர். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச, கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை அவர் இலங்கையின் 13ஆவது பிரதமராக பிரதமராக கடமைபுரிந்திருந்தார்.அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவிவகித்திருந்த நிலையில், பின்னர் 2015ஆம் ஆண்டில் ஆட்சிகவிழ்ந்தது.

பின்னர் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் பதவியிழந்தார்.சுமார் ஒருவருடத்திற்குப் பின்னர் தற்போது பி

ரதமராக அவர் மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு