பரபரப்பால் நிறையும் தெற்கு அரசியல்..! பிரதமராகிறாா் மஹிந்த, காபந்து அரசாங்கம் உருவாகிறது..
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், 15 போ் கொண்ட காபந்து அரசாங்கம் ஒன் று இன்றே அமைக்கப்படவிருக்கின்றது.
புதிய பிரதமர் நியமனம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக 15 பேர் கொண்ட அமைச்சரவை ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டு வந்தது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரு மான தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்கலாம் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் அவரை பிரதமராக நியமிப்பதற்கே மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இன்றைய தினமே எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்துக்கான
15 அமைச்சர்களும் நியமனம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மஹிந்த தலைமையிலான கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.க. தலைவர் ஆறு முகன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என தெரி விக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ
நியமனம் பெற்றதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பிரதமர் பதவியை இராஜி னாமா செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தார். எனினும் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பின்னர்
இன்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றகவுள்ளதுடன்
3.00 மணியளவில் பிரதமருக்கான தனது கடமைகளையும் பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.