கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படவேண்டும்..! ஜனாதிபதி உத்தரவாம். வதந்தி என்றும் தகவல்..

ஆசிரியர் - Editor
தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படவேண்டும்..! ஜனாதிபதி உத்தரவாம். வதந்தி என்றும் தகவல்..

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படவேண்டும். என ஜ னாதிபதி உத்தரவிட்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெ ளியாகியிருக்கின்றது.

இலங்கையின் தேசிய கீதமானது சிங்கள மொழியில் இயற்றப்பட்டுள்ளதுடன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1948ம் ஆண்டே வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் 

1948ம் ஆண்டு கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தின் போது நாட்டின் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடபட்டது.அதனை தொடர்ந்து அரச நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை தவிர்த்து வந்தனர். 

எவ்வாறாயினும் 2015ம் ஆண்டு இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி கொண்டாடபட்ட 

67வது தேசிய சுதந்திரத்தின் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி அவ்வாறான உத்தரவு எதனையும் இடவில்லை. என்றும் இந்த செய்தி வதந்தி என்றும் பேசப்படுகின்றது.

Radio
×