கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அரச ஊழியர்களுக்கு ஆப்பு..! வெளிநாடு செல்ல தடைவிதித்தார் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor
அரச ஊழியர்களுக்கு ஆப்பு..! வெளிநாடு செல்ல தடைவிதித்தார் ஜனாதிபதி..

இலங்கை அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு இடைக்கால தடைவிதித்து ஜனாதிப தி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பணித்துள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநரின் செயலாளர்களுக்கு இந்தப் பணிப்புரை ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்தப் பணிப்புரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர், செயலாளர்கள் தமக்குக் கீழ் வரும் பணித்துறையினருக்கு இந்த பணிப்புரையை நடைமுறைப்படுத்துமாறும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio
×