இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் சமா்பித்தாா் பிரதமா் ரணில்..!
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்து, இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளாா்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு புதிய காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இன்று புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.மேலும் இன் றைய தினம் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ
புதிய பிரதமர் தலைமையிலான 15 அமைச்சர்களைக் கொண்ட ஒரு காபந்து அர சாங்கத்தை அமைக்கவுள்ளார்.சட்டம் ஒழுங்கு நிதி நீதி வெளிவிவகாரம்
உள்ளிட்ட 15 அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றுக்கே அமைச்சர்கள் நிய மிக்கப்படவுள்ளனர். கடந்த திங்கட்கிழமை புதிய ஜனாதிபதியாக
கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்
பிரதமரு மான ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும்
சாத்தியம் உள்ளது.எனினும் பல்வேறு தரப்பினரு ம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பத வியை இராஜினாமா செய்து புதிய அரசாங்கம் அமைக்க இடமளிக்கவேண்டும்
என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் சபாநாயகரும் பிரதமரும் எதிர்க் கட்சி தலைவரும் இது தொடர்பில் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.
குறித்த சந்திப்பில் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பிலும் பாராளு மன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியதைடுத்து
நாட்டில் புதிய அரசியல் நிலைமை தோன்றியுள்ள நிலையில் ஆளும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்ர்கள் தமது அமைச்சுப்
பொறுப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக இராஜிநாமா செய்து வந்த நிலையில் இன்றையதினம் பிரதமர் பதவியில் இருந்து
ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.