துப்பாக்கிகள், வெடிபொருட்கள், இராணுவ சீருடைகள் மீட்பு..! புதையல் தோண்டியவா்கள் தப்பி ஓட்டம்..
புதையல் தோண்டியவா்களை சுற்றிவளைத்த பொலிஸாருக்கு வெடிபொருட்கள் மற் றும் இராணுவ சீருடை, துப்பாக்கிகள், காவி உடை ஆகியன சிக்கியுள்ளது.
கலஹா லூல்கந்தூர தோட்டப் பிரதேசத்தில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இர கசிய தகவலையடுத்து பொலிஸாா் அந்த பகுதியை சுற்றிவளைத்தனா்.
எனினும் புதையல் தோண்டியவா்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அங்கிருந்து பெருமளவு வெடிபொருட்கள், துப்பாக்கிகள், பௌத்த துறவிகள் அணியும்
காவி உடை, இராணுவ சீருடைகள் உட்பட மேலும் பல பொருட்களை கைப்பற்றியுள் ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
பதின்மூன்று கிலோகிராம் வெடி மருந்து, இரண்டு கைத்துப்பாக்கிகள், எட்டு ஜெலட்டின் குச்சிகள், இராணுவ சீருடைகள் இரண்டு, இராணுவ பாதணிகள்,
பௌத்த துறவிகளின் காவி உடை ஒன்று, மின் பிறப்பாக்கி, கேஸ் சிலிண்டர், கற் களை துளையிடும் உளிகள், அறுக்கும் கருவி, நான்கு அலவாங்குகள்,
வயர்கள், கேபல் கம்பிகள், இரத்த கறைகள் படிந்த பூஜை பொருட்கள் உட்பட மேலும் பல்வேறு பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று காலை பொலிஸ் அவசர சேவைப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த கலஹா பொலிஸார்
சந்தேக நபர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்குறிப் பிட்ட பொருட்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு சந்தேக நபர்கள்
ஆயுதங்களுடன் தப்பிச் சென்றிருப்பதாக தெரியவருகிறது. லூல்கந்தூர தோட்ட கல்லு மலை பிரதேசத்தில் பாதையிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில்
அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் காணப்படும் கல் அடுக்குக்கள் பகுதியிலேயே புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்காலத்தில் கண்டி இராஜ்யத்தின் மீதான படையெடுப்புக்களின் போது அங்குரங் கெத்த பிரதேசத்திற்கு ராஜாக்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் வழியில்
பெறுமதியான பொருட்களை மறைத்து வைத்திருக்க கூடும் என்ற நம்பிக்கையில் இதற்கு முன்னரும் சுமார் மூன்று தடவைகள் இவ்விடத்தில் புதையல்
தோண்டும் முயற்சிகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்ட இராணுவ சீருடையில் காணப்பட்ட இலக்கத்தினூடாக
சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.