கட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது..! இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..

ஆசிரியர் - Editor I
கட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது..! இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..

ஜனாதிபதி தோ்தல் காலத்தில் அனைவரையும் நான் நம்பினேன். கட்சியின் தலமை யே எனக்கு பாாிய துரோகம் செய்துவிட்டது. எனக்கு பணத்தை வழங்க மறுத்து என் னை கடனாளியாக விட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் சஜித் பிறேமதாஸ உருக்கமாக கூறியிரு க்கின்றாா். தேர்தலுக்குப் பின்னர் தனக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதிகளை நேற்று திங்கட்கிழமை மாலை கோல்பேஸ் ஹோட்டலுக்கு அழைத்து 

அவர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். மூடிய அறைக்குள் நடந்த இந்தச் சந்திப்பில் கண்ணீர்மல்க அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல் பிரசாரத்துக்குப் பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன். 

எனக்குத் துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர் பாம்புகளைப் போல் செயற்பட்டனர். இந்த இரு தரப்பினரும் எனது தோல்விக்கு வழிவகுத்தனர்.எங்கள் அணியில் இருந்த சிலர், அமெரிக்காவுடன் மிலேனியம் ஒப்பந்தத்தை 

செய்ய ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் பௌத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே இந்தப் பயணத்தில் இறங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோது 

எனக்கென ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய வேண்டுமென கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும், பலர் நான் வெற்றியடை வேண்டுமென ஆசைப்பட்டனர் எனவும், 

தற்போதைய நிலையில், புதிய கட்சி ஆரம்பிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அதற்காக ரணிலுடன் தலைமைப் பதவிக்காக சண்டைபிடிக்கவுவும் மாட்டேன். கட்சியினர் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும். 

அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளேன் – எனவும், கவலை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு