பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படுகிறது..! அறிவித்தாா் ஞானசார தேரா்..
நாடாளுமன்ற தோ்தின் பின்னா் பொதுபலசேனா அமைப்பை கலைக்கபோவதாக அந் த அமைப்பின் செயலாளா் கலகொட அத்தே ஞானசார துரா் கூறியுள்ளாா்.
ராஜகிரிய பிரதேசத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர்,
சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார்.எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது,
சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன்,
நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமென்றும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, இப்போது நல்ல தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்றும் கூறினார்.
அதனால், பொதுபல சேனா என்ற அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து,
தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்.