சிங்கள மக்களால் வெற்றியடைவேன் என்பது தொியும்..! இப்போதும் கேட்கிறேன் தமிழா்களே வாருங்கள்..

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்களால் வெற்றியடைவேன் என்பது தொியும்..! இப்போதும் கேட்கிறேன் தமிழா்களே வாருங்கள்..

சிங்கள மக்களால் வெற்றியடைவேன் என்பது எனக்கு தொியும். சிறுபான்மை மக்கள் என்னுடைன் இணைந்து பயணிக்கவேண்டும். என்பதை நாங்கள் கேட்டேன். அது நடக் கவில்லை. இப்போது ஜனாதிபதியாகவும் கேட்கிறேன். என்னுடன் வாருங்கள். 

மேற்கண்டவாறு 7வது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கூறியி ருக்கின்றாா். இன்றைய தினம் உத்தியோகபூா்வமான பதவியேற்பு நிகழ்வு இன்று அனு ராதபுரம் றுவன் வெலிசாய விகாரையில் நடைபெற்றிருந்தது. 

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், சிங்கள மக்களால் வென்றேன் சிறுபான்மையினர் என்னுடன் இணையவேண்டும் சிறுபான்மையினரை இந்த வெற்றியில் 

பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. ஜனாதிபதியாக அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன், என்னுடன் இணைந்து செயற்படுங்கள். சிங்கள மக்களின் வாக்குகளால் 

மட்டும் என்னால் வெற்றிபெற முடியும் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனது வெற்றியில் பங்கெடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே எமக்குள்ள தற்போதைய தேவையாகக் கருதப்படுகிறது. இதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும். 

எதிர்கால சந்ததியினர் பெருமையாக இங்கு வாழக்கூடிய ஒரு சூழலைத்தான் ஏற்படுத்த வேண்டும்.இவற்றை நான் நிச்சயமாக எமது காலத்தில் மேற்கொள்வேன். தீவிரவாதம், அடிப்படைவாதம், போதைப்பொருள் வர்த்தகம், 

பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக மேற்கொள்வோம்.மேலும், எந்தவொரு சர்வதேச தரப்பினருக்கும் அடிபணியாது, சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் 

என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் ஊடாக உலகமே வியக்கும் ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக மாற்றமடையும். சட்டம் நீதி இலங்கையில் நிலைநாட்டப்படும். எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய அனைத்து உறுதி மொழிகளையும் 

நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுப்போம். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், அனைத்து துறைகளும் தொழில்நுட்ப மாயமாக்கப்படும். எமக்கு முன்னாள் பாரிய சவால்கள் இன்று காணப்படுகின்றன. 

ஆனால், அதுவுமே முறியடிக்க முடியாத சவால்கள் அல்ல.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், நாட்டின் தேவைக்காக எனது அதிகாரத்தை பயன்படுத்த ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு