இலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..!

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 7வது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாா் கோட்டாபாய ராஜபக்ச..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜப க்ச இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தோ்வு செய்யப்பட்டிருக்கி்ன்றாா். இன்று மா லை தோ்தல் ஆணைக்குழு தலைவா் மஹிந்த தேசப்பிாிய அதனை அறிவித்துள்ளாா். 

அதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் 

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச 

அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, 

குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்றுள்ளார்.இந் நிலையில் 52.25 சதவீத வாக்குகளை பெற்று, இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 

தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு