கச்சதீவுக்காக கடலில் இறங்கிய சிவசேனா கட்சி

ஆசிரியர் - Editor2
கச்சதீவுக்காக கடலில் இறங்கிய சிவசேனா கட்சி

கச்சதீவை மீட்டுத்தரக் கோரி சிவசேனா கட்சியினர் கடலில் இறங்கி இன்று போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்களின் நலனுக்காக பாரம்பரிய தீவுகளில் ஒன்றான கச்சதீவை மீட்டுத்தரக்கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடற்கரையில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் புலவன் போஸ் தலைமையில் ஊர்வலமாக சென்று கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் 69ஆவது குடியரசுதினத்தை முன்னிட்டு கச்சதீவை மீட்டுத் தரக்கோரி கடலில் இறங்கி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio
×