எதிர்வரும் 30ஆம் திகதி மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்?

ஆசிரியர் - Editor2
எதிர்வரும் 30ஆம் திகதி மக்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்?

அரச மருத்துவ அதிகாரிகள் எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடர்பில் இது வரையில் அரசாங்கம் உரிய தீர்வொன்றினை பெற்றுத் தராத நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் பல தடவை இந்த பிரச்சினைக்கான தீர்வினை கோரியிருந்த போதிலும் கூட அரசாங்கம் அதற்கான சரியான தீர்வினை வழங்கவில்லை.

இதனால் நாம் மீண்டும் எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டிலுள்ள மக்கள் பலரும் சிக்கலை எதிர்நோக்குவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல பணிப்புறக்கணிப்பு போராட்டங்களின் போதும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Radio
×