விற்பனைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் முட்டை ! அடுத்து இலங்கையிலா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பெருமாண்டி வெங்கடேசா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி நாகேந்திரன்க டந்த 21ம் தேதி பெருமாண்டி காமராஜர் நகரில் உள்ள மளிகைக்கடையில் 8 முட்டைகள் வாங்கினார்.
6 முட்டைகளை அன்றே சமைத்து சாப்பிட்டார். இந்நிலையில் நேற்று காலை மீதமுள்ள 2 முட்டையில் ஒன்றை உடைத்து தோசைக்கல்லில் ஆம்லெட் போட்டார். அப்போது பிளாஸ்டிக் வாடையுடன் ஒருவித நாற்றம் அடித்தது.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது ஆம்லெட் ரப்பர் போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து மற்றொரு முட்டையை எடுத்து பார்த்தார். அப்போது அதன் ஓடுகள் சுருங்கி இருந்தது.
அப்போது தான் அது பிளாஸ்டிக் முட்டை என்பது தெரியவந்தது.
எனவே கும்பகோணம் பகுதியில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். மேலும் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை நடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.