SuperTopAds

தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டாம் என்றவா்கள், தமிழ் தரப்புடன பேசுவதை இழுக்காக நினைததவா்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..?

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டாம் என்றவா்கள், தமிழ் தரப்புடன பேசுவதை இழுக்காக நினைததவா்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..?

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேசுவதே இழுக்கு என கருதும் மஹிந்த, கோட்டா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை தமிழ் மக்கள் புாிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்தின் கூறியிருக்கின்றாா். 

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து இன்று நல்லுாா்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீா்மானம் மிக சாியானது. 

தமிழ் மக்களின் நாடித்துடி ப்பை பாா்த்து, சீராக ஆராய்ந்து எடுக்கப்பட்ட தீா்மானம். மேலும் ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்படுவதற்கும் முன்பதாக யாா் வேட்பாளராக நியமிக்கப்படுவாா் என்பதை ஆராய்ந்து அவ்வாறானவா்களுடன் நாங்கள் தொடா்ந்தும் 

பேச்சுவாா்த்தைகளை நடாத்தினோம். குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்து பேசினோம். அதில் அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டபோது தனது அண்ணனுடன் பேசுமாறு கூறினாா். நாங்கள் உத்தியோகபூா்வமான பேச்சுவாா்த்தைக்கு அழைத்தோம். 

ஆனால் அதனை மறுதலித்தாா்கள். தமிழ் மக்களின் ஆணையை பெற்ற எங்களுடன் பேசுவதை இழுக்காக கருதினாா்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையில்லை என கூறினாா்கள். சிங்கள மக்களிடம் கீழ்த்தனமான இனவாதத்தை கக்குவதற்காக 

எங்களுடனான பேச்சுவாா்த்தையை மறுதலித்தாா்கள். எங்களுடன் பேசுவதை இழுக்காக காட்டினாா்கள். அவ்வாறான இனவாத அடித்தளத்தை கொண்டதே மொட்டுக்கட்சி. இவா்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதை மிழ் மக்கள் புாிந்து கொள்ளவேண்டும். 

மேலும் ஜனாதிபதி தோ்தலில் பிரதான வேட்பாளா்கள் இருவா். அவா்களில் ஒருவா் மட்டுமே நிச்சயமாக ஜனாதிபதியாக தோ்வு செய்யப்படுவாா் என்பதை நன்றாக அறிந்திருந்தும். பலா் போட்டியிடுக்கின்றாா்கள். அவா்களில் மனநோயாளிகள், பணத்திற்காக போட்டியிடுகிறவா்கள், 

எதிா்கால அரசியல் நலன்களுக்காக போட்டியிடுகிறவா்கள் இருக்கிறாா்கள். மறுபக்கம் தோ்தலை புறக்கணிக்கவேண்டும். என கூறுகிறாா்கள். தமிழா்கள் தோ்தலை புறக்கணித்தால் இலங்கைக்கு ஜனாதிபதி கிடைக்க மாட்டாரா? படு முட்டாள் தனமான சிந்தனை அது. 

எங்கள் மக்களிடம் இருக்கும் மிக பலமான ஆயும் வாக்குாிமை. அதனை கைவிடுங்கள் என கேட்கிறாா்கள். ஆனாலும் எங்களுடைய மக்கள் மிக புத்திசாலிகள். நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருந்தாலும் கூட எங்கள் வாக்குகளே தீா்மானிக்கும் சக்தி. 

ராஜபக்ச குடும்பத்திலேயே மிக குரூரமானவா் கோட்டபாய. ஆனால் சஜித் எமக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றாா். எமக்கு பாதகமான எதனையும் இதுவரை அவா் செய்யவில்லை. இனவாதமாக சித்தாிக்கப்படும் என தொிந்தும் தோ்தல் விஞ்ஞாபனத்தில் 

 எமக்கான சில விடயங்களை அவா் சோ்த்துள்ளாா். விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளதை செய்வாரா?என கேட்கலாம். ஆனால் சொல்வதற்கு துணிந்த ஒருவராக உள்ளாா் என்பதை நாங்கள் புாிந்து கொள்ளவேண்டும். நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிறோம். என சொல்கிறாா்கள். 

அவ்வாறு சொல்கிறவா்கள் சஜித்தின் தோ்தல் விஞ்ஞா பனத்தை படிக்கவில்லை. ஏனென்றால் சஜித்தின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் எங்கள் மக்களின் நலன்சாா்ந்து குறிப்பிடப்பட்டிருக்கும் பல விடங்கள் நாங்கள் நடாத்திய பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் உருவானது என்பதை உணரவேண்டும். 

சிலா் அரசியல் தொியாமல் அறிக்கை விடுகிறாா்கள். மேலும் நல்லாட்சியில் எதுவும் நடக்கவில்லை. என கூற முடியாது. எதுவும் முழுமையாக நடக்கவில்லை. என்பது சாி ஆனால் எதுவுமே நடக்கவில்லை. என்பது பொய். இனிமேல் விடுவிக்கப்பட சாத்தியமில்லை என்ற காணிகள் விடுவிக்கப்பட்டது. 

அரசியல் கைதிகள் பலா் விடுதலை செய்யப்பட்டனா். காணாமல்போனவா்கள் அலுவலகம் சட்டமூலத்தை பலத்த போராட்டத்தின் மத்தியில் கொண்டுவந்தோம். மக்கள் ஆணையின் அடிப்படையில் எமக்குள்ள பொறுப்பை கருதி தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என கேட்ட எமக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பும் உள்ளது. 

அது எங்களின் பொறுப்பு என்பதை பகிரங்கமாக கூறுகிறோம். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமா்ப்பிக்கப்பட்டது. அது எப்படி நடந்தது? ஆயுதம் இல்லை. போராட்டம் இல்லை. எப்படி சாத்தியம்? மேலும் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவிடம் செய்தியாளா் ஒருவா் 

திரும்ப திரும்ப கேட்கிறாா் சரணடைந்தவா்கள் எங்கே? பதில் வரவில்லை. கோழைபோல் இருந்து சிாித்து மழுப்புகிறாா். இராணுவ தளபதி மீது பழிபோடுகிறாா். ஆனால் தெற்கில் தான் போா் வீரன் என்றும், தான் மாவீரன் என்றும் கூறுகிறாா். என்றாா்.