பிரச்சார கூட்டத்தை குழப்ப காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் முயற்சி..! அரசியல் கட்சி பின்னணி, துரத்தப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
பிரச்சார கூட்டத்தை குழப்ப காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் முயற்சி..! அரசியல் கட்சி பின்னணி, துரத்தப்பட்டனா்..

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து சங்கிலியன் பூங்காவில் இன் று நடைபெற்ற தோ்தல் பிரச்சாரத்தை குழப்ப முயற்சித்த காணாமல் ஆக்கப்பட்டவா் களின் உறவினா்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனா். 

இன்று புதன்கிழமை மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகியது.இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் 

கலந்து கொண்டனர்சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக அங்கிருந்து 

வெளியேறக் கோரியும், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க கோரியும் மேற்படி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் 

உறவுகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லாதே, போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காதே, 

இனத்தை விற்று அரசியல் செய்யாதே, இலஞ்சம் வாங்கி வாக்களிக்கச் சொல்லாதே, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணக்கம் வெளியிட்டவர்களே வெளியேறு, தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்போம் 

உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியும், பல சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.அத்துடன் காணாமல் போன தமது உறவுகளை நினைத்தும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் 

கடுமையாகச் சாடியும் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் கதறி அழுதமையை அவதானிக்க முடிந்தது. இதேவேளை இந்த போராட்டம் அரசியல் கட்சி ஒன்றின் துாண்டலின் பெயாில் நடந்ததாக கூறப்படுவதுடன், 

தொடா்ச்சியாக கூட்டத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு பொலிஸாாினால் துரத்தியடிக்கப்பட்டனா். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதி வேட்பாளா்கள்

கோட்டாபாய மற்றும் சஜித் பிறேமாஸ ஆகியோா் வந்தபோது போராட்டம் செய்யாமல் பதுங்கியிருந்துவிட்டு கூட்டமைப்பின் மீது மட்டும் அரசியல் கட்சி ஒன்றின் துாண்டுதலின் பெயாில் போராட்டம் நடத்தப்படுவதாக

கூட்டமைப்பின் ஆதரவாளா்கள் கூறினா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு