ஊடக படுகொலைகளுக்கு நீதிகோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாள்..! யாழ்.நகரில்..

ஆசிரியர் - Editor I
ஊடக படுகொலைகளுக்கு நீதிகோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாள்..! யாழ்.நகரில்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக் கு நீதிகோரும் விழிப்புணர்வு பயணத்தின் இறு தி நாளான இன்று யாழ்.நகரில் இடம்பெற்றது.

நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர் களுக்கு எதிராக குற்றமிழிப்போதை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தினை 

முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பயணம் இன்று புதன்கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் 

தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.

குறிப்பாக மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்றும், யாழ்.பிரதான பஸ்நிலையம், 

சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர். 

இவ் வழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு