4 நாட்களுக்குள் குண்டு தாக்குதல்..! இந்திய உளவுத்துறை 2வது தடவையாக எச்சரிக்கை..
ஐனாதிபதி தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக இந்திய உளவுத்துறை 2வது தடவையாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பேருவளை, வெளிகம, தர்கா நகர் போன்ற பிரதேசங்களில் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் வாக்குகளை சித்தறடிக்க வைப்பதற்கான உள்நோக்கத்தில் அசம்பாவிதம் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலே இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு மத்தியில் நாளை நடைபெறும் இறுதி பிரசார கூட்டங்களுக்கு அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குண்டு வெடிப்புச் சம்பவம் இன்றை தேர்தல் நலனுக்காக நிகழ்த்த சதி செய்து வருவதாக தமக்கு தகவல் கிடைத்தது என்று கூறி
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.