கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபை தலைவா் கோட்டா பக்கம் தாவினாா்..! கூட்டமைப்பு மீது நம்பிக்கை இல்லையாம்..

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபை தலைவா் கோட்டா பக்கம் தாவினாா்..! கூட்டமைப்பு மீது நம்பிக்கை இல்லையாம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கட்ந்த 2 வருடங்களில் ஒரு நன்மையினையும் பெறாத நிலையில் தாம் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாவை ஆதரிக்கப்போகிறேன்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச்சபை தவிசாளர் பி.றொஷான் கூறியுள்ளார். இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்க ளை சந்தித்து கருத்து கூறுப்போதே 

அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளராக இருக்கிறேன். இந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்தோ, 

இந்த நல்லாட்சியிடமிருந்தோ, எந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 9 கிலோ மீற்றா் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமலிருக்கின்றது. அதேபோல் துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமலிருக்கின்றது. 

இவ்வாறு கடந்த 2 வருடங்களில் ஒரு அபிவிருத்தியும் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோட்டாவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளோம். 

பொதுவாகவே மக்கள் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்திருக்கின்றோம். 

போா் நிறைவடைந்து 2 ஆண்டுகளில் கிளிநொச்சி நகரை கட்டியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ச நெடுந்தீவையும் கட்டியெழுப்புவாா். மேலும் முன்னாள் போராளியான என்னையும் என்னைபோன்ற 

போராளிகளையும் விடுதலை செய்ததைபோல்  தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுவாா் என நம்புகிறேன்.அந்த அடிப்படையிலேயே கோட்டாவை ஆதாிக்க தீா்மானித்துள்ளோம் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு