கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி..

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா நாளை செய்வாய் கிழமை அவசரமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். 

இந்த சந்திப்பு பெரும்பாலும் கொழும்பில் நடைபெறலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு முடிவு செய்திருந்தாலும் 

ஜனாதிபதி மைத்திரி, சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 05 நாட்களே இருக்கின்ற நிலையில், 

நாளை நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியின் முடிவில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு