யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து பறந்தது 1வது பயணிகள் விமானம்..! வரலாற்று நிகழ்வு இன்று..
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று 11 (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. .இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து Alliance விமானம் 9I 101 முற்பகல் 10.35 மணிக்கு
புறப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மதியம் 12.16 தரையிறங்கியது.இந்த விமானத்தில் 13 பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்த விமானத்தில் 35 பேர் பயணித்தனர். இதில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் பொது மக்கள், யாழ்.வணிகர் குழு உறுப்பினர்கள் சிலரும் பயணித்தனர்.
இப் பயணித்திற்கு முன்பு காலை சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன். போது கேக் வெட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 7,900 ரூபாய்
அறவிடப்படவுள்ளது. இரு வழி கட்டணமாக 30,937ரூபா அறவிடப்படும்.பயணி ஒருவர் 15 கிலோ கிராம் பொருட்களை (லக்கேஜில்) கொண்டு செல்ல முடியும். மேலும் கைபொருளாக 7 கிலோ கிராம பொருளை எடுத்துச் செல்லமுடியும்.
அடுத்த விமானம் இந்தியாவில் இருந்து புதன் கிழமை சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வரவுள்ளது.வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில்
இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை தனியார் விமான நிறவனமான பிட்ஸ் எயார் விமான முன்வந்துள்ளது.
இந்த விமான சேவையை முன்னெடுப்பதற்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நன்றி- ஊடகவியலாளா் நிருஜன் செல்வநாயகம்.