கோட்டாவை ஆதாித்து முல்லைத்தீவில் பிரச்சார கூட்டம்..! மதுபான போத்தல்கள் பாிசு.. போதையில் மிதந்த ஆதரவாளா்கள்..

ஆசிரியர் - Editor
கோட்டாவை ஆதாித்து முல்லைத்தீவில் பிரச்சார கூட்டம்..! மதுபான போத்தல்கள் பாிசு.. போதையில் மிதந்த ஆதரவாளா்கள்..

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவை ஆதாித்து இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவா்களுக்கு மதுபான போத்த ல்கள் தாராளமாக வழங்கப்பட்டதுடன், 

முல்லைத்தீவு  கடற்கரையை மதுபான சாலையாக மாற்றிய ஆதரவாளா்கள் மதுபான போத்தல்களுக்காக சண்டையிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.  இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் 

அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் 

வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். 

அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதானிக்கமுடிந்தது .

Ads
Radio
×