கடத்தப்பட்ட 5 மாணவா்கள் உள்ளட்ட 11 தமிழா்கள் திருகோணமலை- கடற்படை வதை முகாமில் சுட்டு கொல்லப்பட்டிருககலாம்..!

ஆசிரியர் - Editor
கடத்தப்பட்ட 5 மாணவா்கள் உள்ளட்ட 11 தமிழா்கள் திருகோணமலை- கடற்படை வதை முகாமில் சுட்டு கொல்லப்பட்டிருககலாம்..!

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவா்கள் உள்ளிட்ட 11 பேரும் கன்சைட் எனப்படும் திருகோணமலை கடற்படை முகமில் உள்ள வதை முகாமில் சுட் டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சீஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது. 

இதற்காக எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் சி.ஐ.டி. கன்சைட் சித்திரவதை முகாமுக்குள் இடம்பெற்றதாக நம்பப்படும் கொலைகள் குறித்து உறுதியான முடிவுக்கு வர 

தற்போது மருத்துவ பகுப்பாய்வு மற்றும் இரசாயன பகுப்பயவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான தேவையான அனுமதிகளை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடமிருந்து சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் சி.ஐ.டி.க்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விஷேட உளவுப் பிரிவொன்றினால் 

முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாக அது குறித்து மிக ஆழமான விசாரணைகள் ஒடம்பெற்றுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Ads
Radio
×