SuperTopAds

மக்களின் காணிகளை திருடி தன் மனைவியின் தாயாருக்கும், சகோதரனுக்கும் கொடுத்த வவுனியா பிரதேச செயலா்..!

ஆசிரியர் - Editor I
மக்களின் காணிகளை திருடி தன் மனைவியின் தாயாருக்கும், சகோதரனுக்கும் கொடுத்த வவுனியா பிரதேச செயலா்..!

போா் காரணமாக இடம்பெயா்ந்த மக்களுடைய காணிகளை வவுனியா பிரதேச செய லா் தன்னுடைய உறவினா்களுக்கு மோசடியாக வழங்கியமை விசாரணை அறிக்கை மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

வவுனியா பிரதேச செயலாளரினால் முறைக்கேடான முறையில் காணி அனுமதிப்பத் திரங்கள் வழங்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது. இம் முறைப்பாட்டின் பிரகாரம் அரசாங்க அதிபரிடம் 

மனித உரிமை ஆணைக்குழு குறித்த விடயம் தொடர்பில் வினவியிருந்தது. இந்நிலை யில் மாவட்ட செயலகத்தினால் முறைக்கேடாக காணிகள் வழங்கப்பட்டதா என கா ணி விடயங்களுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரினால் 

விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் கடந்த நான்காம் மாதம் வழங்கப்பட்ட அறிக்கையில் போா் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசிக்கும் ஆட்களின் காணிகளினை பிரதேச செயலாளர் கா. உதயராசா 

குடியேற்ற உத்தியோகத்தர் பா. சுரேஸ் கிராம சேவகர் பொ. ஜெயபாலன் ஆகியோரால் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை என தலைப்பிட்டு விசாரனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ் அறிக்கையே மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அரச அதிபரிடம் வினவியதன் அடிப்படையில் தற்போது அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.இவ் அறிக்கையின் விதப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சிவசுப்பிரமணியம் மகாராணி சிவசுப்பிரமணியம் சதீஸ் என்பவர்கள் வவுனியா பிரதேச செயலாளரின் மனைவியின் தாயார் மற்றும் சகோரர் என்று விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முறைப்பாட்டாளரால் குறிப்பிடப்பட்ட அன்ரன் ரொஜர் ஸ்டலின் தொடக்கம் அர்தாகி மாரியம்மா வரையான 20 நபர்களின் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட காணியானது தனி நபர்களிற்கு குடியிருப்பு நோக்கத்திற்கென 

வழங்கப்பட்ட காணி ஆகும். எனவே இதனை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது. மேலும் பண்ணை ஒன்றை அமைப்பதாயின் அது குத்தகை மூலமே வழங்கப்பட முடியும். ஆத்துடன் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட காணி பயன்பாட்டுத் 

திட்டமிடற்குழுவின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இம் முறைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாது பிரதேச செயலகதத்தினால் ஏ.கே.ஆர். எனும் பெயரில் பண்ணை வியாபாரம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இது சட்ட ரீதியற்றது. எனவே இவ் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இரத்துச் செய்யப்படவேண்டும் என குறிப்படப்பட்டுள்ளது. அத்துடன் மனோகரன் மதனகாசன் தொடக்கம் கனகதுரை சவுந்தரேஸ்வரி வரையுள்ள 

முறைப்பாட்டாளர்களின் காணியானது திட்டமிட்ட வகையில் கிராம அலுவலரின் உறவினரிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது என அவ் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தொடர்பில் 

வேறு பல காணிகளும் பல இடங்களில் உள்ளமை விசாரணை அறிக்கையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள விசாரணை அறிக்கையாளர் மேற்படி அனுமதிப்பத்திரம் அனைத்தையும் இரத்துச்செய்யப்படவேண்டும் 

என தெரிவித்துள்ளார். இதேவேளை உமாபதி ரனுஜாதேவி தொடக்கம் பண்சாட்சரம் அட்சுதமேனன் வரையான நபர்களின் காணிகள் கிராம அலுவலரின் உறவினர்களு டையது என்று விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனினும் இவர்கள் இக் காணியை பரம்பரையாக ஆளுகைக்குட்படுத்தி வந்துள்ளனரா இவர்களுக்கு வேறு காணிகள் இல்லையா என விசாரித்து காணி வழங்க தகுதியானவ ர்கள் எனின் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை 

எடுக்கப்பட முடியும் இல்லையேனில் இவர்களது அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யபபடவேண்டும் எனவும் விதப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆத்துடன் மனோகரன் சசிகலா மனோகரன் தர்சிகா மனோகரன் ராஜ்குமார் 

ஆயோரது அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் இவை உடனடியாக இரத்துச் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அருந்தவராஜா சுமன் எதிர்மன்னசிங்கம் பரமேஸ்வரன் மனோகரன் ராஜ்குமார் 

கனகதுரை சவுந்தரேஸ்வரி ஆகியோருக்கு புதிதாக பகிர்ந்தளிக்கப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளாவன ஏற்கனவே 1969 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகள் ஆகும். 

ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்துச்செய்யப்படாது புதிதாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை சட்டரீதியற்றவை. எனவே புதிதாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்படவேண்டும்.