சற்றுமுன்னர் முல்லைத்தீவு_பரந்தன் வீதியில் விபத்து!

சற்றுமுன்னர் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கார் ஒன்றும் சிறிய ரக உழவியந்திரம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.