நாளை மறுதினம் திறக்கிறது யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம்..!

ஆசிரியர் - Editor I
நாளை மறுதினம் திறக்கிறது யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையம்..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை மறுதினம் திங்கள் கிழ மை பயணிகள் விமானசேவை உத்தியோகபூா்வமான ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. 

சென்னையிலிருந்து முதலாவது விமானம் நாளை மறுதினம் நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருப்பதாக 

சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்தார்.முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் திங்கள் , 

புதன் , வெள்ளி ஆகிய தினங்களில் நடத்தப்படும். பின்னர் படிப்படியாக நாளாந்த சேவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 

சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி மேலும் குறிப்பிட்டார்.

Radio