கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீா் மின்தடையால் பெரும் பரபரப்பு..!

ஆசிரியர் - Editor
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீா் மின்தடையால் பெரும் பரபரப்பு..!

கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன் பயணிகள் பெரும் அசௌகாியங்களுக்கு உள்ளாகினா்.

விமான நிலையத்தினுள் இயங்கும் குடிவரவு குடியகல்வு திணைக்கள மற்றும் சுங்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதேபோல், விமான நிலையத்தின் A/C அமைப்பு மற்றும் விமான நிலைய தொலைபேசி வலையமைப்பும் முடங்கியது.

இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்தனர். விமான நிலையத்தினுள் நிறுவப்பட்டுள்ள பிரதான மின்வழங்கல் தடைப்பட்டால் தானியங்கி ஜெனரேட்டர் அமைப்பு இயங்காததன் காரணமாக 

இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் திருத்து வேலைகள் இடம்பெற்று காலை 9​.20 மணியளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

Ads
Radio
×