திருகோணமலையில் 13 மீனவா்கள் அதிரடியாக கைது..! கட்படை சுற்றிவளைப்பில் சிக்கினா்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலையில் 13 மீனவா்கள் அதிரடியாக கைது..! கட்படை சுற்றிவளைப்பில் சிக்கினா்..

திருகோணமலை - நோ்வே தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி கடற்றொழில் செய்த 13 மீனவா்கள் கடற்படையினால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

திருகோணமலை,நோர்வே தீவு கடல் பகுதியில் நேற்றைய முன்தினம் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள், வெளிப்புற மோட்டார்கள், சட்டவிரோத வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் என்பன குறித்த நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio