தமிழா்களின் அரசியல் உாிமை பிரச்சினை மற்றும் பல அடிப்படை பிரச்சினைகள் குறித்து வாய் திறக்காத சஜித்..!
யாழ்.மாவட்டத்திற்கு தோ்தல் பிரச்சாரத்திற்காக வருகைதந்த ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களின் அரசியல் உாிமை பிரப்பினை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறிதது வாய் திறக்கவில்லை என விமா்சனங்கள் எழுந்துள்ளது.
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக சஜித் பிரேமதாஸ வடக்கிற்கு நேற்று விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த சஐித் பிரேமதாஸ யாழ்.சங்கிலியன் பூங்காவில் கல்வி இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகெஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும்
கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். ஆயினும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளான அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கல்,
காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனைகள் குறித்தும் ஏதும் பேசவில்லை. இதே போன்றே வடக்கில் இடம்பெற்ற ஏனைய கூட்டங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. யாழில் இடம்பெற்ற இப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ரிஷாட் பதியூதீன் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உட்பட
கட்சிப் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.