கோத்தாவுக்கு எதிரான வீடியோவில் சஹ்ரானின் மனைவி!

ஆசிரியர் - Admin
கோத்தாவுக்கு எதிரான வீடியோவில் சஹ்ரானின் மனைவி!

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் மனைவியை வைத்து, எமக்கெதிராக சேறுபூசும் வீடியோ தயாரிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தெரிவித்துள்ளார்.

தோல்வியை தாங்கிக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், புதிய ஜனநாயக முன்னணியினருக்கும் முடியாது. ஆகையால், எமக்கெதிரான சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதனோர் அங்கமாக, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்திருந்த, சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை, நவம்பர் 13ஆம் திகதியன்று கசியவிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனூடாக, சஹ்ரானுக்கும் கோத்தா, மஹிந்தவுக்கும் இடையில் நெருங்கிய உறவொன்று இருந்ததாக, காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

கோத்தாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கவிருப்பதாக, ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். எங்களுக்கு எந்தவோர், இரண்டாவது விருப்பு வாக்கும் தேவையில்லை. ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையில்லை.

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, சிறுபான்மையின மக்களின் எந்தவோர் ஆதரவும் தனக்குத் தேவையில்லையென, கோத்தாபய ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றார்.

Radio