தமிழ்,முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும்! - சம்பந்தன்

ஆசிரியர் - Admin
தமிழ்,முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும்! - சம்பந்தன்

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமையில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும், எனவே சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும், அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

Radio