கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

போர்க்காலத்தில் கிழக்கில் இயங்கிய ஜிஹாத் குழு!- பொலிஸ் அதிகாரி வாக்குமூலம்

ஆசிரியர் - Admin
போர்க்காலத்தில் கிழக்கில் இயங்கிய ஜிஹாத் குழு!- பொலிஸ் அதிகாரி வாக்குமூலம்

போர் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா சாட்சியமளித்துள்ளார்.

குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறு பட்டதாக காணப்பட்டது என அவர் இதன்போது கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று 4 ஆவது நாளாக நடைபெற்றது. இதில் 3 ஆவது சாட்சியாளராக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் திலீப் திவாகர டி சில்வா நேற்று சாட்சியளித்திருந்தார்.

Radio
×