ஸ்ரீறங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபா் வழக்கு தாக்கல்..! 8 வருடங்களின் பின் மெல்ல துலங்கும் உண்மைகள்..

ஆசிரியர் - Editor I
ஸ்ரீறங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபா் வழக்கு தாக்கல்..! 8 வருடங்களின் பின் மெல்ல துலங்கும் உண்மைகள்..

2011ம் ஆண்டு விபத்து சம்பவம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்ரீ ரங் காவின் பாதுகாவலா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பில் சட்டமா அதிபாினால் வவு னியா மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் சட்டத்தை அமுல் செய்யாது, சந்தேக நபர் தப்பிச் செல்ல இடமளித்தமையை மையப்படுத்தி அப்போது வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த தற்போது 

ஓய்வுபெற்றுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த 2011 மார்ச் 30 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் 

பதிவு செய்யப்படாத லேன்ட் குறூஷர் ரக ஜீப் ஒன்றினை ரங்கா செலுத்தியுள்ளார். மதவச்சி - மன்னார் வீதியில் மன்னார் நோக்கி பயணிக்கும் போது பாதையில் இருந்து விளகி செட்டிக்குளம் வைத்தியசாலை மதிலுடன் மோதி 

விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று இவ்வாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரனி தப்புல டி லிவேராவின் 

அலோசனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு