புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்! - சஜித்

ஆசிரியர் - Admin
புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்! - சஜித்

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடிந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

புதிய அமைச்சரவைக்கு மோசடியில் ஈடுபடாத நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும். மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய அரசியலமைப்பு செயல்படுத்தப்படமாட்டாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் வாகன அனுமதிப்பத்திரத் இரத்துச்செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Ads
Radio
×