அரசியல்வாதிகளை விடவும் மோசமாக பல்ட்டி அடிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோா் சங்க செயலாளா் ஆ.லீலாவதி..!

ஆசிரியர் - Editor I
அரசியல்வாதிகளை விடவும் மோசமாக பல்ட்டி அடிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோா் சங்க செயலாளா் ஆ.லீலாவதி..!

காணாமல்போனவா்களின் உறவினா்கள் சிலா் பற்றி கூறிய கருத்தை தமிழ்தேசியக் கூட்டமைப்பு தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துகிறது. என வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோாின் உறவினா்களது சங்க செயலாளா் ஆ.லீலாவதி குற்றஞ்சாட்டியுள்ளாா். 

இன்று கிளிநொச்சியில் இம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 22ம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு 

யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறித்த காலப்பகுதியில் எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிதைத்து புதிய அமைப்புக்களை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்த முற்பட்ட சம்பவம்

தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்திருந்தேன். இதன்போது வவுனியாவை சேர்ந்த சிலர் தொடர்பில் கருத்து கூறவேண்டி ஏற்பட்டது. அதற்காக நாம் அவர்களை விலக்கியோ அல்லது அவர்களை குறை கூறும் வகையிலோ 

நாம் செயற்படவில்லை. அவர்களின் புாராட்டமும் எமது போராட்டமும் ஒன்றே. அனைவரும் ஒரே விடயத்தை முன்வைத்தே போராடிவருகின்றோம். அவர்களும் தமது பிள்ளைகளை தேடியே போராடுகின்றனர். 

எமது போராட்டத்தை தமது அரசியல் சுய இலாபங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என்பதையே அன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தோம்.குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களை 

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமது சுயநலனிற்காக பயன்படுத்தியுள்ளனர். அதனை தமக்கு சாதகமான சில ஊடகங்களிலும் அதனை வெளியிட்டு நாம் வவுனியாவை சேர்ந்த எமது உறவுகளை விமர்சிப்பதாக காண்பித்துள்ளனர். 

அன்று நடந்த சம்பவத்திற்கும், எமது ஊடக சந்திப்பிற்கும் தொடர்பு கிடையாது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது சுயநலனிற்காகவும், தம்மை வெள்ளையடித்து காண்பிக்கவும் குறித்த ஊடக சந்திப்பின் சிறு காட்சியை 

பயன்படுத்தியுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம். இவர்கள் அன்றுதொட்டு இன்றுவரை தமது சுயநலனையே பார்த்து வருகின்றனர். எமது போராட்டத்தை சிதைத்து, அதன் நோக்கத்தை குழப்பி தமது 

சுகபோக வாழ்க்கையை முன்னெடுத்துள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வவுனியாவை சேர்ந்த எமது உறவுகளை நாம் தமிழ்தேசிய கூட்டமைப்ப்கு எதிராக அன்று இடம்பெற்ற சம்பவத்தை விமர்சிக்கவில்லை. 

அவர்களும் எமது உறவுகள். தமது சுயநல அரசியலிற்காகவும், தம்மை வெள்ளையடடித்து காண்பிப்பதற்காகவும் நான் குறிப்பிட்ட விடயங்களின் சிறு காணொளியை காண்பித்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது ஐக்கியதேசிய கட்சியின் வேட்பாளரிற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அன்றுமுதல் 

எமக்கெதிரான விடயங்கள் அத்தனைக்கும் மௌனம் காத்தனர். 2 வருட கால அவகாசம் வழங்கியபோதும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியும் அவர்கள் பல 

துரோக செயல்களை முன்னெடுத்தனர். தாம் சொகுசு வாழ்க்கை வாழவும், தமக்கு கிடைக்கும் சலுகைகளிற்காகவும் இவர்கள் பல சந்தர்ப்பங்களில் எமக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் அவ்வப்போது சுட்டிக்காட்டியிருந்தோம். 

எமக்கு எதிராக செயற்படும் அத்தனை தமிழ் கட்சிகள் தொடர்பில் அவ்வப்புாது எமது கண்டனங்களை வெளியிட்டுக்கொண்டே வருகின்றோம். தற்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அற்ப சலுகைகளிற்காகவும்

சுகபோகத்திற்காகவுமே தமது ஆதரவினை வழங்கியுள்ளது என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு