குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் ஏன்..? மின்சாரசபை ஊழியா்களும் போராட்டத்தில்..

ஆசிரியர் - Editor I
குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் ஏன்..? மின்சாரசபை ஊழியா்களும் போராட்டத்தில்..

மின் துண்டிப்பிற்கு சென்ற மின்சாரசபை ஊழியா்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படாமை எதற்காக? எனக்கேட்டு வவுனியாவில் மின்சாரசபை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 

இந்நிலையில் அத்தாக்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக

வவுனியா பொலிசார் சிலரை கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுக்கு தலைமை வகித்தவராக தெரிவிக்கபடுபவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை தமது ஊழியர்களின் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள 

முக்கிய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை அலுவலகத்தின் முன்பாக மின்சார சபை ஊழியர்களால் 

இன்று மதியம் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஆர்பாட்டகாரர்கள் முக்கிய குற்றவாளியை கைதுசெய், எம்மை தாக்கியவரை பொலிசார் கைதுசெய்ய தயங்குவது ஏன் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட 

பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு