கிளிநொச்சியில் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தி என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலையில் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், முக்கிய மாக இதன் தாக்கத்துக்கு அதிகளவு சிறுவர்கள் உள்ளாகியுள்ளதாகவும்
வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வழமைக்கு மாறாக அதிகளவான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சைக்கு வருவதாகவும்,
அதில் பெரும்பாலா னவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தின் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதோடு ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
எனவே சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக பேணுவ தோடு நன்கு சுட்டாறிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்துமாறும் சிறுவர்கள் மலசல கூடத்திற்கு சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு கழுவுமாறும்
சுகாதார துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.