சிங்களவர்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முயற்சி! - மகிந்த குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
சிங்களவர்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முயற்சி! - மகிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள சமூகத்திடம் ஒரு கருத்தினை குறிப்பிட்டு ஏமாற்றி, தமிழ் மக்களுக்கு சமஷ்டியை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.கலகெதர நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிள் தேர்தல் கொள்கை பிரகடனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை அனைத்து இன மக்களுக்கம், பொதுவானதாகவும், பொருளாதாரத்தினை முன்னேற்றுவதாகவும் காணப்படுகின்றது. ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனம் ஒருதலைபட்சமானது.

இலங்கை தமிழரசு கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவர் ஊடகங்களுக்கு சிங்கள மொழியில் ஒரு விதமாகவும், தமிழ் மொழியில் பிறிதொரு விதமாகவும் கருத்துரைத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் சிங்கள மொழியில் ஒருமித்த நாடு என்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் சமஷ்டி முறைமையினை தோற்றுவிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இனத்தினை ஏமாற்றும் செயற்பாடாகும். எனவே நாடு மீண்டும் பிளவுப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அவர் கூறினார்.

Radio
×