SuperTopAds

வவுணதீவு கொலைகளை தமிழீழ விடுதலை புலிகள் செய்யவில்லை என்பது எனக்கு முன்பே தொியும்..! கூறியது கோட்டா..

ஆசிரியர் - Editor I
வவுணதீவு கொலைகளை தமிழீழ விடுதலை புலிகள் செய்யவில்லை என்பது எனக்கு முன்பே தொியும்..! கூறியது கோட்டா..

மட்டக்களப்பு- வவுணதீவில் இரு பொலிஸாா் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்ப ட்ட சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சம்மந்தம் இல்லை. என்பது என க்கு தொியும் என கோட்டாபாய ராஜபக்ச கூறியுள்ளாா். 

சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நாங்கள் தீவிரவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்தோம். 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் 30 வருடகால போரினை முடிக்க முடியாதென்றும், இராணுவ ரீதியில் அதனை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களின் 

ஆலோசகர்கள் கூறினார்கள்.எனினும் போரை முடிவுறுத்த இரண்டரை வருடங்களிற்குள் நடவடிக்கை எடுத்தோம். அன்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் என்போரை 

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தினோம். ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது. என்னையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவே கைது செய்ய முயற்சி 

செய்ததாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ கூறினார்.மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டபோது எமது முன்னாள் புலனாய்வு அதிகாரி விசேடமாக அமைச்சில் பணிபுரிந்த அந்த அதிகாரி 

என்னுடன் தொடர்புகொண்டு இந்த படுகொலையை நிச்சயமாக விடுதலைப் புலிகள் செய்திருக்காது என்றும் இனவாதிகளின் செயற்பாடாக இருக்கலாம் எனவும் கூறினார்.உடனே இரகசிய பொலிஸாரிடம் கூறும்படி நான் கூறினேன். 

என்ன நடந்தது? இறுதியில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட துப்பாக்கி 

சஹ்ரானிடமிருந்து மீட்கப்பட்டது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்குவோம் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு – வவுனதீவு பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை இடம்பெற்றதன் பின்னர் இது தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் வெளியிடப்பட்டதோடு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு 

நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக ஆரம்பித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தனர்.இந்நிலையில், வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல 

என்பதை தாம் அறிந்திருந்ததாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.